Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ஒரே பயண சீட்டு..ஆனால் பயணங்கள் மட்டும் வெவ்வேறு - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    இனி ஒரே பயண சீட்டு..ஆனால் பயணங்கள் மட்டும் வெவ்வேறு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    ஒரே பயணசீட்டில் மூன்று வகையான பயண சேவைகளை பயன்படுத்தும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளை, புறநகர் ரயில்களையும் மெட்ரோ ரயில் சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். 

    இதில் பலர் இரண்டு வகையான சேவைகளை பயன்படுத்தி விரைவாக அலுவலகம் செல்கின்றனர். அதே சமயம் மூன்று வகையான போக்குவரத்தை பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். அப்படி பயணிக்கும் நபர்கள் மூன்று வெவ்வேறு சேவைகளுக்கான பயண சீட்டுகளை வாங்கும் சூழல் இருக்கிறது. 

    இதன் காரணமாக, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள், சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்கள் ஆகிய மூன்றையும் இணைத்து ஒரே பயணசீட்டில் பயணம் செய்வதற்கான கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 

    இந்நிலையில், இன்று சென்னை மாநகர பொதுப் போக்குவரத்தை இணைத்து ஒரே பயணசீட்டு திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையும் படிங்கமறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....