Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிமான பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - மத்திய அரசு அறிவிப்பு

    விமான பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு

    நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக, விமானத்தில் பயணிக்கும் பொழுது முகக்கவசம் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,175 ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் தொடரிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது. 

    இதன்படி விமானப் பயணத்தின்போது பயணிகள் இனி கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், முகக்கவசம் அணிய வில்லை எனக்கூறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் , கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பயணிகள் தாமாக முன்வந்து முகக்கவசம் அணியலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்கஇனி ஒரே பயண சீட்டு..ஆனால் பயணங்கள் மட்டும் வெவ்வேறு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....