Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    ‘ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    மத்திய பட்ஜெட் உரையில் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்நிகழ்வின் போது அவர் பேசுகையில் புதிய வரி நடைமுறை குறித்து தெரிவித்தார். 

    அதன்படி, புதிய வரி நடைமுறையில் வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று தெரிவித்தார். மேலும், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    இதைத்ததொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், 

    ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும். ஏற்கனவே ரூ.5 லட்சமாக வரை இருந்த உச்ச வரம்பு பட்ஜெட்டில் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    காதலர் தினம்; கோடிக் கணக்கில் ஆணுறைகள் இலவசம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....