Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆறு மாதங்களுக்கு வாடகை இல்லை, முழு நேர பாதுகாப்பு - நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவில் திருத்தம்

    ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லை, முழு நேர பாதுகாப்பு – நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவில் திருத்தம்

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு ஆண்டுக்கு  முழு நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

    கடந்த செவ்வாய் கிழமை அன்று மத்திய அரசு செய்த திருத்தங்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் குறித்த அறிவிக்கையில், ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அல்லது அந்தந்த உயர் நீதிமன்றங்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை ஓராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஆகஸ்ட் 26-ம் தேதி ஓய்வுபெறவிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் பாதுகாப்பு வசதியும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இவ்விரு வசதிகளும் வழங்கப்படும் என்று அறியமுடிகிறது. 

    முன்னதாக, அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முழு நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read : பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு டெண்டர் அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....