Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதீபாவளியை முன்னிட்டு சாலை விதிகளை மீறினால் அபராதம் இல்லை! இனி பூங்கொத்துகளை தருவார்கள்

    தீபாவளியை முன்னிட்டு சாலை விதிகளை மீறினால் அபராதம் இல்லை! இனி பூங்கொத்துகளை தருவார்கள்

    தீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என குஜராத் அரசு அறிவித்துள்ளது. 

    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட நாடு முழுவதும் பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 

    இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

    சாதாரண விடுமுறை நாட்களில்லேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த சமயங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பலர் மீறிச் செல்வர். அப்படி மீறிச் செல்பவர்களுக்கு போக்குவரத்துகாவல்துறை மூலம் அபராதங்கள் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    “தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் வருகிற 27 ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளிடமிருந்து குஜராத் போக்குவரத்து காவல்துறை எந்தவித அபராதமும் வசூலிக்காது. இதனால், போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடாது என்ற அர்த்தமில்லை தவறு செய்தால், அபராதம் கட்ட தேவையில்லை. விதிகளை மீறுவோரிடம் அவர்களை நிறுத்தி இப்படி செய்யாதீர்கள் என பூங்கொத்துகள் தருவார்கள்” என குஜராத் உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி தெரிவித்துள்ளார். 

    குஜராத் மாநிலத்தில் சில நாட்களாகவே அபராதம் தளர்த்தப்பட்டது. அதேவேளையில், தமிழக அரசு விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று புதிதாக 2,112 பேருக்கு பாதிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....