Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுடியும்.. ஆனா எப்ப துவங்கும்னு தெரியாது? மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஆர்டிஐயில் வெளியான ஷாக்கிங் தகவல்

    முடியும்.. ஆனா எப்ப துவங்கும்னு தெரியாது? மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஆர்டிஐயில் வெளியான ஷாக்கிங் தகவல்

    மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் ஏதுமில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. 

    மேலும், பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதவாது கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது 

    கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணிகள் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் ஆகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. 

    இதையும் படிங்க: தேஜா வூ.. ஜமாய் வூ..இது மாயசக்தியா இல்லை எதிர்காலத்தை கணிக்கும் திறனா..?

    இதில் ஆறுதலாக இருப்பது என்னவென்றால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்கியிருப்பது மட்டும் தான்.

    இந்நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் கேட்டிருந்த சில கேள்விகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தேதி குறித்த தகவல்கள் இல்லை என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா தெரிவித்துள்ளதாவது: 

    தகவல் அறியும உரிமைச்சட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த பதிலில், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அக்டோபர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும் என்றும் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

    அதோடு, மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜெய்கா நிறுவனம் வழங்குவதாகவும், 20 சதவீதத் தொகையான 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது எனவும், அதற்காக 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை-பாமக தலைவர் கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....