Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுடிச 13-ல் இருந்து அடுத்த மழை! வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?

    டிச 13-ல் இருந்து அடுத்த மழை! வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?

    வங்கக் கடலில் வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் டிசம்பர் 13 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது.

    கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....