Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமிக கனமழை எதிரொலி; நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    மிக கனமழை எதிரொலி; நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கையின் காரணமாக அம்மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை இயல்பைக் காட்டிலும் 91 சதவீதம் கூடுதலாக பெய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களாகவே மழை சற்று குறைந்து இருந்தது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 2) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, நீலகிரியின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

    மேலும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகைக்கு சென்றுள்ளனர். 

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கையின் காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 3) ஒருநாள் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். 

    சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....