Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் - மக்கள் போராட்டம்

    கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் – மக்கள் போராட்டம்

    கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் அருகே உள்ள சுப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சசிரேகா. 9 மாத கர்ப்பிணியான சசிரேகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை அனுமதித்துள்ளனர். அங்கு சசிரேகாவிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதைத்தொடர்ந்து, சசிரேகாவின் உடல்நிலை மோசமானது. அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் சொன்னதையடுத்து உடனடியாக அங்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனை அடுத்து, உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகத்தான் சசிரேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மேலும், உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சசிரேகாவை பிரசவத்திற்காக சேர்த்தபோது அங்கிருந்த ஊழியர்கள் ரூ.2000 லஞ்சம் கேட்டதாகவும், பணம் கொடுத்த பிறகுதான் பிரசவத்திற்கு அனுமதித்தனர் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன்காரணமாக, ஆத்திரம் அடைந்த சசிரேகா உறவினர்கள் உதயேந்திரம் வாணியம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி, அவ்வழியில் சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் செய்தனர்.

    இதுபற்றி தகவலறிந்த, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முறையான சிகிச்சை வேண்டும்:

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பகல் பணியில் மட்டுமே மருத்துவர்கள் இருக்கின்றனர்.
    • இரவு நேரத்தில் அங்குள்ள செவிலியர்களே பிரசவ பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
    • போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில் கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுப்பதில் சிக்கலில் தவிக்கின்றனர்.
    • இன்னும் பல இடங்களில் தாமதமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதால், கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்யப்படவேண்டிய பரிசோதனைகள் முடிவதற்குள் குழந்தைகள் இறந்து விடுவதற்கு வாய்ப்புள்ளது.
    • சில நேரங்களில் கர்ப்பிணிகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க கர்ப்பிணிகளை அனுமதிக்க வேண்டும்.
    • இன்னும் சில இடங்களில் அரசு மருத்துவமனைக்கு அருகில் கர்ப்பிணிகள் இருந்தாலும் வெகுதொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை அணுகுமாறு, சில கிராமப்புற செவிலியர்கள் தவறாக வழிகாட்டுகின்றனர்.
    • அரசு மருத்துவமனையில் எங்கு வேண்டுமானாலும் பிரசவ சிகிச்சை செய்ய அனுமதிக்க வேண்டும்.
    • வீணாக கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்க தமிழக அரசு, முன்வர வேண்டும்.

    இவ்வாறாக முறையான சிகிச்சை வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....