Friday, April 26, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேன் நிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

    தேன் நிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

    மராட்டிய மாநிலத்தில் தேன் நிலவு சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

    மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் முகமது குவாசிப் இம்தியாஸ் ஷேக். 23 வயதான இவருக்கு மிக சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர் அவரது மனைவி மற்றும் 2 நண்பர்களுடன் தேன் நிலவு சென்றார். 

    இவர்கள் சென்ற இடத்தில் குதிரை சவாரி பிரபலம். அதனால் புதுமாப்பிள்ளையான முகமது இம்தியாஸ் ஷேக், மனைவி மற்றும் இரு நண்பர்களுடன் குதிரை சவாரி செய்தார். அப்போது, முகமது இம்தியாஸ் ஷேக் சென்ற குதிரை கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றது. எவ்வளவு முயற்சி செய்தும் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை. திடீரென குதிரை கீழே தள்ளியதில் முகமது இம்தியாஸ் ஷேக்குக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அவர், மததேரான் பகுதியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக உல்ஹஸ்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் குறித்து உல்ஹஸ்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து பேசிய காவல் அதிகாரி சேகர் லாவே, குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்றும் இதனை பின்னபற்றாத சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரைக்காரர்களுக்கு கடும் அபராதம் விதிக்க ஆவண செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

    தேன் நிலவுக்காக சென்ற இளம்வயது புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ‘சிங்கத்தின் அசைவுகளை ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது’ – பிரபல இயக்குநர் குறித்து வசந்தபாலன் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....