Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா8 சிறுத்தைகளுக்கு 2000 பெயர்களா?.. பிரதமர் மோடியின் அறிவிப்பால் கொட்டிய பெயர் மழை

    8 சிறுத்தைகளுக்கு 2000 பெயர்களா?.. பிரதமர் மோடியின் அறிவிப்பால் கொட்டிய பெயர் மழை

    நமீபியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களைப் பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நமீபியாவிலிருந்து தனி விமானம் மூலமாக 8 சிறுத்தைகள் அழைத்து வரப்பட்டன. 

    அந்த 8 சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய வன விலங்கு உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி தன் பிறந்த நாளன்று திறந்து விட்டார். 

    நமது நாட்டில் முற்காலத்தில் வேட்டையாடி அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் உருவாக்க ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவிலிருந்து ஐந்து ஆண் சிறுத்தைகளும் 3 பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், அந்த சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களைப் பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசின் இணையதளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். 

    இதன்படி அசோகா, சந்திரகுப்தா, விக்கிரமாதித்யா, பிரித்விராஜ், லஷ்மி பாய், மில்கா சிங், சிம்பா, தேஜஸ், ருத்ரா, வித்யூத், இந்திராணி, சக்தி, கங்கா, காவேரி உள்ளிட்ட பழங்கால அரசர்கள், அரசிகள், விளையாட்டு வீரர்கள், நதிகள் என சுமார் 2000 புதிய பெயர் பரிந்துரைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ‘ரொம்ப பயமா இருக்கு’ – பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து விக்ரம் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....