Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அப்பத்தா' பாடலைத் தொடர்ந்து வடிவேலு குரலில் வெளிவந்த மற்றொரு பாடல்

    ‘அப்பத்தா’ பாடலைத் தொடர்ந்து வடிவேலு குரலில் வெளிவந்த மற்றொரு பாடல்

    ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் இருந்து ‘பணக்காரன்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

    நடிகர் வடிவேலு நடிப்பில் தற்போது சந்திரமுகி-2, மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவற்றுள் வடிவேலு கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் திரைப்படம்தான், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சுராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

    திரைப்படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. ஏற்கனவே, நாய் சேகர் எனும் கதாப்பாத்திரத்தில் வடிவேலு கலக்கியதை, அதனால் வயிறு வலிக்க ரசிகர்கள் சிரித்ததை எவரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். 

    இப்படியான நாய் சேகர் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் வெளிவந்திருந்த போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பாடலாசிரியர் விவேக்கின் வரியில் ‘அப்பத்தா’ என்ற பாடல் வெளிவந்து, ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

    இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்தப்பாடல் தற்போது வெளிவந்துள்ளது. ‘பணக்காரன்’ என்ற பெயர்க் கொண்ட இப்பாடலை பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுத, வடிவேலு பாடியிருக்கிறார். 

    முன்னதாக வெளிவந்த அப்பத்தா பாடலை வடிவேலு பாடியிருந்ததும், திரைப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....