Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமியான்மர் கடத்தல் விவகாரம்; போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள் என மத்திய அரசு எச்சரிக்கை

    மியான்மர் கடத்தல் விவகாரம்; போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள் என மத்திய அரசு எச்சரிக்கை

    இந்திய இளைஞர்களைக் குறிவைத்து போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதனால், வெளிநாடு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

    தாய்லாந்தில் வேலைக்கு சென்ற 200 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தாய்லாந்தில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாக இந்திய இளைஞர்களைக் குறிவைத்து போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. 

    இந்த விளம்பரங்கள் கால் சென்டர் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. எனவே, சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்திய இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

    துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமும் இந்தப் போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்தப்போலி விளம்பரங்களை நம்பி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், சட்டவிரோதமாக மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு, மோசமான சூழலில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஐடி துறையைச் சேர்ந்தவர்களைத்தான் இந்த மோசடி நிறுவனங்கள் குறிவைக்கின்றன.

    இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க : குழந்தைகளுக்கு பதில் குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! இப்படி கூடவா நடக்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....