Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎன் உண்மையான பெயர் 'திரௌபதி முர்மு' இல்லை- குடியரசுத் தலைவர்

    என் உண்மையான பெயர் ‘திரௌபதி முர்மு’ இல்லை- குடியரசுத் தலைவர்

    இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு, தனது உண்மையான பெயர் திரௌபதி முர்மு இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, திரௌபதி முர்மு சில ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தபோது, அவரது உண்மையான பெயர் திரௌபதி முர்மு இல்லை என்றும் அவரது பள்ளி ஆசிரியர் தான் இந்தப் பெயரைச் சூட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தபோது சந்தாலி கலாசாரத்தின்படி, அவருக்கு வைத்த பெயர் “புதி” என்றும், நன்மை நடக்கும் எனக் கூறி, திரௌபதி என்ற பெயரை அவரின் ஆசிரியர்தான் சூட்டியதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஆசிரியருக்கு அவரது ‘புதி’ என்ற பெயர் பிடிக்கவில்லை அதனால், அவரது ஆசிரியர் அவரது பெயரை திரௌபதி என மாற்றியுள்ளார். 

    மேலும், சந்தாலி கலாசாரத்தின்படி, பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரும், ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரும் சூட்டப்படுவது வழக்கம் எனவும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவருக்கு முப்படைகள் மரியாதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....