Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் பலி

    குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் பலி

    குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

    குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

    மேலும், அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதும் வழக்கமாக இருக்கிறது. 

    இந்நிலையில், அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை, வாங்கி அருந்திய பலரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். 

    இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் போட்டாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

    பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு- மூன்று பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....