Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமழைக்கால கூட்டத்தொடர்: முதல் நாளே கடும் அமளி

    மழைக்கால கூட்டத்தொடர்: முதல் நாளே கடும் அமளி

    ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவையின் பிற அலுவல்கள் தொடங்கியவுடன், அரிசி தயிர் போன்ற பொருள்களுக்கு புதிதாக விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத்தொடங்கினர்.

    இன்று நடைபெற்ற குடியரசுத் தேர்தல் காரணமாக மதியம் 2 மணிவரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பிற்பகலில் அவை கூடியவுடன், ஜிஎஸ்டி வரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.

    மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....