Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படுமா? அமைச்சர் சொன்ன தகவல்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படுமா? அமைச்சர் சொன்ன தகவல்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று, அறநிலை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். 

    விழாக்காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகில் இருக்கும் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் கட்ட தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 

    இந்நிலையில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய இறுதி கட்ட பணிகளை இன்று அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். 

    அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குத்தி ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 

    இந்தப் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என 250 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தபப்ட்ட இருப்பதாகவும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பேருந்து நிலையத்தை திறப்பதற்கான குறிப்பிட்ட தேதியை தற்போது நிர்ணயிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

    புயல், வெள்ளம் காரணமாக பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் பணிகளை விரிவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் 

    மேலும் அமைச்சர் சேகர் பாபு, இன்றைய ஆய்வில் பல புதிய பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும் வலியுறுத்தி இருப்பதால் அந்தப் பணிகளும் செய்ய இருப்பதாகவும், மக்கள் தொகைக்கு ஏற்ப கோயம்பேடு கிளம்பாக்கம் போல இன்னும் 2 அல்லது 3 பேருந்து நிலையங்களை அமைத்தால் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.  

    ஆளுநரின் அலட்சியத்தை தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....