Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்புதிய கல்விக் கொள்கைக்கு அவசியமே இல்லை - பொன்முடி பேச்சு!

    புதிய கல்விக் கொள்கைக்கு அவசியமே இல்லை – பொன்முடி பேச்சு!

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் தரச்சான்று வழங்கும் விழா நடைபெற்றது.

    இக்கல்லுரிக்கு A++ என்ற தரச்சான்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக மேடையில் பேசிய, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: கல்வி, பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார். அப்பொழுது அரங்கில் கரகோஷம் எழுந்தது.

    1955-ல் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லூரி நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி. இது 4-வது முறையாக NAAC அமைப்பால் A++ தரவரிசையைப் பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, வலியுறுத்தி பெற்றுத்தந்தது திராவிட இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தான் திராவிட மாடல் அரசு .

    தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு, தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கியது திமுக அரசு தான் என்றார்.

    கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் திமுக அரசுதான் என கூறினார். மேலும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தொடர்ந்து அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

    சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை” என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....