Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்இந்தியாவை உலுக்கும் சித்து மூஸ்வாலா கொலை! யார் காரணம்?

  இந்தியாவை உலுக்கும் சித்து மூஸ்வாலா கொலை! யார் காரணம்?

  பஞ்சாப் பாடகர் சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தில் கனடாவை மையமாக கொண்டு செயல்படும் தாதா கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற பின்னர், கடந்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. ஏற்கனவே பஞ்சாப்பில் கடுமையான கேங்-வார் நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாடகருமான சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

  மூஸ் வாலா தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் ஒரு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அவர்களின் காருக்கு நேர் எதிரில் இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் மூஸ் வாலா மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டது. இருக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூசா வாலா உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்து போயிருந்தார்.

  இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த 26ம் தேதி ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் படுகொலை என காங்கிராஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மூஸ்வாலா ஆம் ஆத்மி அரசை தனது பாடலில் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கேங்க் வார் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருப்பதாக பஞ்சாப் டிஜிபி பவுரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் : துப்பாக்கிச்சூட்டை லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர் நடத்தி இருப்பதாகவும், அக்கூட்டத்தில் கனடாவை சேர்ந்த லக்கி என்பவர் துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்று இருப்பதாகவும் தெரிவித்தார். மூஸ் வாலாவுக்கு இரண்டு கமாண்டோ பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களை மூஸ் வாலா அழைத்து செல்லவில்லை என்றும், குண்டு துளைக்காத கார் மூஸ் வாலாவிடம் இருப்பதாகவும் அதையும் வெளியில் சென்ற போது எடுத்து செல்லவில்லை என்று பவுரா தெரிவித்தார்.

  இக்கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றையும் போலீஸார் அமைத்துள்ளனர். இக்காரியத்தில் ஈடுபட்ட யாரையும் விட்டு வைக்கமாட்டோம் என்றும், பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் மாநில முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

  காங்கிரஸ்;

  இதனிடையே, “பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும், திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலா கொலையால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

  இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

  அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....