Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோசடி செய்த அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை

    மோசடி செய்த அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை

    ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைக்கேடு தொடர்பான பணமோசடி வழக்கில், அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் இன்று (ஜூலை 23) கைது செய்தனர் . 

    மேற்கு வங்கத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரிடமிருந்து ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக நேற்று (ஜூலை 22) இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணைக்கு பிறகே பார்த்தா சட்டர்ஜி கைதுசெய்யப்பட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    இதனிடையே, நேற்று (ஜூலை 22) இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் பிரபல பின்னணி பாடகரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை ரூ.21 கோடியை கைப்பற்றியது. அர்பிதா முகர்ஜியின் மொபைல்களும் கைப்பற்றப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

    இந்நிலையில், மற்றொரு அமலாக்கத்துறை குழுவினர், கூச் பெகாரில் உள்ள அம்மாநில கல்வி அமைச்சர் சுவேண்டு அதிகரி வீட்டில் நேற்று (ஜூலை 22) வெள்ளிக்கிழமை சோதனை செய்துள்ளனர். 

    மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் 13 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் மேற்கு வங்க ஆரம்பக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சாரியா வீட்டிலும், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் சாந்தி பிரசாத் சின்ஹா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

    முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....