Wednesday, May 1, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை; நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

    கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை; நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மே மாதம் 30-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இம்முறை வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. 

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே அவ்வபோது கேரளாவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கேரளா முழுவதும் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் தவிர கேரள மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்காடு போன்ற 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால், கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்கும்படியும் மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    மணிப்பூரில் திடீர் நிலச்சரிவு! 14 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....