Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசர்வதேச போல்வால்ட் போட்டியில் கலக்கிய மயிலாடுதுறை மாவட்ட வீராங்கனை!

    சர்வதேச போல்வால்ட் போட்டியில் கலக்கிய மயிலாடுதுறை மாவட்ட வீராங்கனை!

    ‘ஊர்க்குருவி’ என்ற சொல்லாடலை அடித்து நொறுக்கும் வகையில் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பரணிகா எனும் வீராங்கனையும் சேர்ந்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணிகா. இவர் ஒரு போல்வால்ட் வீராங்கனை. கோலுன்றி உயரம் தாண்டும் விளையாட்டே போல்வால்ட் என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாத நிலையில், இவர் சர்வதேச போல்வால்ட் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். 

    கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற 2022 சர்வதேச போல்வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பரணிகா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இப்போட்டியில் முதலிடம் பிடித்த ஜப்பான் நாட்டு வீராங்கனை 4.10 மீட்டர் உயரமும், இரண்டாம் இடம் பிடித்த மலேசிய நாட்டு வீராங்கனை 4 மீட்டர் உயரமும் தாண்டிய நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற பரணிகா 3.90 மீட்டர் உயரம் தாண்டி அசத்தியுள்ளார். 

    சர்வதேச போல்வால்ட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள பரணிகாவை தற்போது பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒருவரின் வெற்றி மற்றவர்களுக்கு பாதை அமைக்க வேண்டும் என்பர். அப்படியாக பலருக்கு பரணிகாவின் இந்த வெற்றி மேலும் பல மாணவர்களுக்கு பாதை அமைக்கும் என மயிலாடுதுறை மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    முன்னதாக, பரணிகா ஜூன் 10-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) போல்வால்ட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

    பரணிகா இந்தப் போட்டியில் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    அஜித்குமார் நடிக்கும் ‘ஏகே-62’ இந்த திருநாளிலா வெளியாகிறது? வெளிவந்த தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....