Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇனி கிரிக்கெட்டுக்கு விளம்பரதாரர் பேடிஎம் இல்லையாம் - வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    இனி கிரிக்கெட்டுக்கு விளம்பரதாரர் பேடிஎம் இல்லையாம் – வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்துக்கு நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

    பிசிசிஐயின் விளம்பரதாரராகத் 2019-ல் ரூ. 326.80 கோடிக்கு பேடிஎம் நிறுவனம், தேர்வானது. இந்த ஒப்பந்தம் 2023 வரை நீடிக்க இருந்தது. ஆனால், கடந்த ஜூலையில் விளம்பரதாரருக்கான உரிமையை மாஸ்டர்கார்ட் நிறுவனத்துக்கு மாற்றி விடுமாறு பேடிஎம் கோரிக்கை விடுத்தது. 

    இதையடுத்து, பேடிஎம் கோரிக்கை விடுத்ததன்படி, பிசிசிஐ சார்பாக இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களின் விளம்பரதாரராகத் தற்போது மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும், இந்தியாவில் 2022-23 பருவத்தில் நடைபெறும் சர்வதேச ஆட்டங்கள், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள், பிசிசிஐ நடத்தும் ஜூனியர் போட்டிகள் ஆகியவற்றின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் செயல்படவுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....