Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய இணை அமைச்சர் வீட்டின் மீது கற்கள் வீச்சு; கைது நடவடிக்கையில் காவல்துறை!

    மத்திய இணை அமைச்சர் வீட்டின் மீது கற்கள் வீச்சு; கைது நடவடிக்கையில் காவல்துறை!

    கேரள மத்திய இணையமைச்சர் வீட்டின் மீது கற்களை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். 

    கேரள மாநிலத்தில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய கண்ணூரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 

    கடந்த 8 ஆம் தேதி இரவு திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அமைச்சரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் கார் நிறுத்துமிடத்தை ஒட்டி அமைத்துள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லை. 

    இதற்கு அடுத்தநாள் காலை அமைச்சரின் உதவியாளர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிஎப்ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்ததால், இது அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதின் பேரில் மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மனோஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று பேசுவதாகவும், இருப்பினும் முறையான மருத்துவ சான்றிதழ் அவரிடம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

    முத்தங்களும் முத்தங்களின் எண்ணிக்கையும் போட்டி போடட்டும் – கிஸ் டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....