Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமயக்க ஊசியின் பிடியில், மக்களை அச்சுறுத்திய யானை

    மயக்க ஊசியின் பிடியில், மக்களை அச்சுறுத்திய யானை

    வயநாட்டில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய PM-2 மக்னா என்ற யானை கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. 

    கேரளாவின் வயநாடு மாவட்டதின் முக்கிய பகுதியாக கருதப்படும், சுல்தான் பத்தேரிக்குள் கடந்த 6-ஆம் தேதி யானை ஒன்று புகுந்தது. இந்த யானை நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. இதைத்தொடர்ந்து, ஊர்மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    மேலும், யானையை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். யானையை பற்றி வனத்துறையினர் விவரங்கள் சேகரித்தனர். அதன்படி, நகருக்குள் புகுந்த யானையின் பெயர் PM-2 மக்னா. 

    இந்த PM-2 மக்னா கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருவரை கொன்றதோடு 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு முதுமலை அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் அந்த யானை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்ட வனப்பகுதிக்குள் புகுந்தது.

    இதன்பின்பு கடந்த 8 ஆம் தேதி யானையை பிடித்து, முகாம் கொண்டு சென்று வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், யானை மற்றொரு ஆண் யானையுடன் சேர்ந்து, சதுப்பு நிலம் பகுதியில் இருந்ததால் அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், இன்று காலை PM-2 மக்னா யானை சுல்தான் பத்தேரி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள சிறிய வனப்பகுதியில் இருந்தது. அப்போது, கேரள வனத்துறையினர் வெற்றிகரமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். 

    பிடிக்கப்பட்ட இந்த யானை முத்தங்கா பகுதியில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மரக்கூண்டில் அடைத்து வளர்ப்பு யானையாக மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாட்டு வாத்தி போக்சோவில் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....