Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை பட்டாசு ஆலை விபத்து- ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

    மதுரை பட்டாசு ஆலை விபத்து- ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

    மதுரை பட்டாசு ஆலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அழகு சிலை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த டிவிட்டர் பதிவில், “மதுரை பட்டாசு ஆலைகள் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்த ஐந்து பேர் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்கதொடங்கியது இரு மாநில எல்லையில் டிஜிட்டல் நில அளவை பணிகள்: விளக்கமளித்த வருவாய் துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....