Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇலவசமாக ஆடைகளை வழங்கும் மால்; நெகிழ்ச்சியில் மக்கள்!

    இலவசமாக ஆடைகளை வழங்கும் மால்; நெகிழ்ச்சியில் மக்கள்!

    லக்னோவில் உள்ள மால் ஒன்று ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. 

    இந்தியாவின் பல பகுதிகளில் குளிர்காலம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மக்களை நடுங்க வைத்து வருகிறது. அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் அதீத குளிரால் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. சமீபத்தில் தில்லியில் அதீத பனி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், மூணாறில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியது. 

    இப்படியாக குளிர்காலம் இந்தியாவில் நிலவி வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள கடை ஒன்று இலவசமாக ஆடைகள் மற்றும் போர்வைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. 

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வளாகமானது, அப்பகுதியில் உள்ள ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. 

    மேலும், இந்த மால் நன்கொடையாளர்களிடமிருந்து கம்பளி ஆடைகளைப் பெற்று, பின்னர் அதை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்தப் பணியை அனோகா மால் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் இந்த மால் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

    ஆளுநர் மாளிகை குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....