Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நீங்க கஷ்டப்பட்றீங்கனு நினைச்சா... ' - ரசிகர்களை கவர்ந்த லவ்டுடே இயக்குநரின் பேச்சு!

    ‘நீங்க கஷ்டப்பட்றீங்கனு நினைச்சா… ‘ – ரசிகர்களை கவர்ந்த லவ்டுடே இயக்குநரின் பேச்சு!

    இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் லவ்டுடே படத்தின் 100-வது நாள் விழாவில் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

    கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான், லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே பெரிய கவனத்தைப் பெற்றது. இப்படத்தில், சத்யராஜ், இவானா, ராதிகா, ரவீனா ரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர். தினேஷ் புரோஷத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

    சமீபத்தில், இந்தப் படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லவ் டூடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப்ரங்கநாதன் பேசியது வெகுவாக பலரையும் கவர்ந்தது. 

    அவர் பேசுகையில், அவர் தெரிவித்ததாவது;

    அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தைஅறிமுகப்படுத்துவது எளிதானதல்ல.அதில் நம்பிக்கை, முதலீடு என எல்லாமே பெரியது. அதை ஏஜிஎஸ் நிறுவனம் செய்ததை நான் மறக்கமாட்டேன். இந்தப்படம் உலகம் முழுவதும் ரூ.100கோடியை தாண்டியுள்ளது. இது ரசிகர்களால்தான் சாத்தியமானது. 

    இந்தப் படத்தின் ஆரம்ப கட்டத்தில் என் நண்பர்கள், ‘லவ் டுடே பெரிய மலை மாதிரி. ஏறுவது கஷ்டம். கோமாளி ஹிட்கொடுத்தபிறகு, ஹீரோவாக நடிக்கிறேன் என்று மொக்கை வாங்கிவிட்டால், மீண்டும் எழுந்துகொள்வதுகஷ்டம்’ என்றார்கள். எனக்கும் அது தெரிந்தது. மலை ஏறுவது கஷ்டம்தான்.

    ஆனால், மலை ஏற என்ன வேண்டும் என்பதைத் தாண்டி, முதலில் மலை வேண்டும். ‘லவ் டுடே’தான் அந்தமலை. பரங்கிமலை மாதிரி என்றால்ஏறிவிடலாம். எவரெஸ்ட் ஏறுவதுதான் கஷ்டம். நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தால் பெரிய மலையில் ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க இதோ வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....