Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்லெஜெண்ட் சரவணன் லியோ படத்தில் இணைய வாய்ப்பா?

    லெஜெண்ட் சரவணன் லியோ படத்தில் இணைய வாய்ப்பா?

    நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணனின் காஷ்மீர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ‘லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன், அவரது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

    இதனைத்தொடர்ந்து, அவரது தயாரிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது.

    இந்நிலையில், காஷ்மீரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இருந்து லெஜெண்ட் சரவணன் காணொளி ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அந்தப் பதிவில் காஷ்மீரில் லெஜெண்ட் என பதிவிட்டு இருந்தார்.

    இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் சரவணன் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு காஷ்மீரில் லியோ படக்குழுவுடன் இணைந்திருப்பதாகவும் இணைய வாசிகள் பேசி வந்தனர்.

    இதனிடையே, இன்று காலை காஷ்மீர் பனிப் பொழிவுக்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை ‘லெஜெண்ட் சரவணன்’ பதிவிட்டு அதில், விரைவில் சுவாரஸ்யமான தகவலை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருப்பினும், படக்குழு தரப்பில் இருந்தும் லெஜெண்ட் சரவணன் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிப்ரவரி 27, 28 ஆம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....