Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையரங்கில் புதிய திட்டம்; தாய்மார்களுக்காக கேரள அரசு அதிரடி...

    திரையரங்கில் புதிய திட்டம்; தாய்மார்களுக்காக கேரள அரசு அதிரடி…

    திரையரங்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்று படம் பார்ப்பதற்காக கேரள அரசு “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. 

    திரையரங்குகளில் திரைப்படங்களை பார்ப்பதென்பது இன்றளவும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இருப்பினும், திரையரங்குளுக்கு வரும் குழந்தைகள் இருட்டாலும், அதிக ஒலியாலும் எளிதில் அழத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் உடன் வரும் பெற்றோர்கள் உடனே குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்று விடுவர். இந்த நிகழ்வானது அவ்வபோது திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், கேரள மாநிலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்கில் மேற்கூறிய  நிகழ்வுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    அதன்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்று படம் பார்ப்பதற்காக “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கைரளி-ஸ்ரீ-நிலா என்ற திரையரங்கத்தில் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. 

    இத்திட்டம் குறித்து கேரள அமைச்சர் வி.என்.வாசன் தெரிவித்துள்ளதாவது:

    குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வரும் பெற்றோர்கள் படத்தை பார்ப்பது கடினம். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் சத்தம், இருட்டு ஆகிய காரணிகளால் அழத் தொடங்குகின்றனர், இதனால் பெற்றோர்கள் அங்கிருந்து வெளியே செல்ல நேர்கிறது. 

    ஆனால், இனி குழந்தைகள் அழுதால் பெற்றோர்கள் வெளியில் தேவையில்லை. அவர்கள் அழுகை அறைக்கு செல்லலாம். இந்த அறையில் குழந்தைக்கான தொட்டில் மற்றும் டயப்பர் மாற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் படம் பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    மாநில அரசின் கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) மாநிலத்தில் உள்ள மற்ற திரையரங்குகளில் அழுகை அறைகளை திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....