Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅம்பேத்கர் பற்றிய பாடம் நீக்கம்; கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!

    அம்பேத்கர் பற்றிய பாடம் நீக்கம்; கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!

    பள்ளிப் பாடப் புத்தகங்களில், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுவது வழக்கமான ஒன்று. அவ்வப்போது பாடத்திட்டங்களின் மாற்றத்திற்கு ஏற்ப, வரலாற்றுப் பாடங்களிலும் மாறுதல்கள் இருக்கும். தற்போது, கர்நாடகா மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், “அரசியல் அமைப்பின் சிற்பி” எனும் தலைப்பில் அம்பேத்கர் வரலாறு இடம் பெற்றிருந்தது. ஆனால், கர்நாடகா அரசு இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு, புத்தகத்தில் இருந்து நீக்கியது.

    கர்நாடக அரசின் இந்த செயலைக் கண்டித்து, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட ‘அரசியல் அமைப்பின் சிற்பி’ எனும் அம்பேத்கர் பாடத்தை மீண்டும் சேர்க்கும்படி கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது.

    கர்நாடக மாநிலத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்களில், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணி நடந்தது. இதில், பல்வேறு தலைவர்களின் பாடங்களை நீக்கிவிட்டு, புதியவற்றை சேர்க்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபட்டது. இந்த செயலுக்கு பல இலக்கியவாதிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ம.ஜ.த.,வும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்‌.

    முந்தைய பாடத்திட்டத்தின் படி, 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “அரசியல் அமைப்பின் சிற்பி” எனும் அம்பேத்கர் பாடம் இடம் பெற்றிருந்தது. பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் போது, அம்பேத்கர் பாடம் நீக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா மாநிலம் முழுவதும், ஆங்காங்கே பல போராட்டங்கள் நடந்தன.

    அம்பேத்கர் பாடத்தை, பாடப்புத்தகத்தில் மீண்டும் சேர்க்கும் படி முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, பல தரப்பிலும் இருந்து நெருக்கடி அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், பாடப் புத்தகத்தில் நீக்கப்பட்ட ‘அரசியல் அமைப்பின் சிற்பி’ என்ற பாடத்தை மீண்டும் சேர்த்து, கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இதைப்போலவே 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பக்தி பந்தா மற்றும் சூபி சந்தா ஆகிய இருவரின் பாடங்கள் நீக்கப்பட்டது. இதற்கும் பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்து. இதன் காரணமாக, பக்தி பந்தா மற்றும் சூபி சந்தா ஆகிய இருவருடைய பாடங்களையும் மீண்டும் சேர்க்கும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தனது மகனின் மதிப்பெண்களை பயணிகளிடம் பகிர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....