Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திடீர் மாரடைப்பால் மரணமடைந்த அமைச்சர்...பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    திடீர் மாரடைப்பால் மரணமடைந்த அமைச்சர்…பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி திடீர் மாரடைப்பால் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவிற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரி சட்டசபை தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் உமேஷ் கட்டி. இவர் வனத்துறை மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உமேஷ், பெங்களூருவில் உள்ள தனது டாலர்ஸ் காலனி வீட்டுக்கு இரவு 10.30 மணிக்கு வந்துள்ளார். இரவு உணவை முடித்து உறங்க செல்வதற்கு முன்பாக, கழிவறைக்குக் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால், பயந்துபோன அவரது வீட்டின் உறவினர்கள் மற்றும் சமையல்காரர் கதவை தட்டிப் பார்க்க அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அமைச்சர் உமேஷ் கட்டி கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். அமைச்சரின் திடீர் மரணம் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த உமேஷ் கட்டிக்கு, மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

    அமைச்சர் உமேஷ் அவர்களின் மறைவு குறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உமேஷ் கட்டி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எனக்கு சகோதரர் போல் இருந்தார். அவருக்கு இதய நோய் இருப்பது தெரியும். ஆனால் அது அவரின் உயிரைப் பறிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மாநில வளர்ச்சிக்காக அவர் நிறைய நன்மைகள் செய்துள்ளார். பல்வேறு துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். அதிகம் பேசமாட்டார். அவர் ஒரு செயல்வீரர். அவரது மறைவு மாநிலத்திற்கு நிச்சயமாக பேரிழப்பு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரது இறுதிச் சடங்கு முழு மாநில அரசு மரியாதையுடன் பெலகாவியில் நடைபெறும். இதனால் அங்குபள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

    அதேபோல் உமேஷ் கட்டி அவர்களின் மறைவு செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    உமேஷ் கட்டி அவர்கள் ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 1985ல் அவரது தந்தை விஸ்வநாத் கட்டியின் மறைவைத் தொடர்ந்து உமேஷ் கட்டி அரசியலில் நுழைந்தார். கடந்த 2008ல் பாஜகவில் இணைவதற்கு முன்பு, ஜனதா தளம், ஜேடியு மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளில் இருந்தார். முன்னதாக ஜே.எச்.படேல், பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு; சூடுபிடிக்கும் உட்கட்சி விவகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....