Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்று கார்கில் போர் வெற்றி தினம்- தலைவணங்கினார் இந்திய குடியரசுத் தலைவர்

    இன்று கார்கில் போர் வெற்றி தினம்- தலைவணங்கினார் இந்திய குடியரசுத் தலைவர்

    நமது இந்திய நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த கார்கில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இந்திய ராணுவம் மீட்ட தினமே கார்கில் வெற்றி தினம் என்றும் கார்கில் விஜய் திவாஸ் என்றும் கொண்டாடப்படுகிறது.

    முன்னதாக, 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கிய கார்கில் போர் அதே ஆண்டு ஜூலை 26-ம் தேதி வரை நீடித்தது. இந்திய விமானப்படை மற்றும் தரைப்படை இந்தப் போரில் மிக முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தான் உடனான இந்த போரில் இந்தியா 1999-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி  வெற்றி பெற்றது. அன்றிலிருந்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. 

    இந்த ஆண்டும் ஜூலை 26-ம் தேதியாகிய இன்று கார்கில் வெற்றி தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “கார்கில் வெற்றி தினம் நமது ராணுவத்தின் வீரத்துக்கான சின்னம். இந்திய நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள். ஜெய்ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.

    இந்த கார்கில் வெற்றி தினம் என்பது இந்திய குடிமக்கள் கார்கில் போரில் உயிரிழந்த மற்றும் பங்குபெற்ற வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.

    மேலும், இரு மாத காலம் நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா சார்பில் போராடிய 527 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 1300-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    குடியரசுத் தலைவருக்கு முப்படைகள் மரியாதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....