Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாஞ்சிபுர கோயில் அதிகாரி பெண் ஊழியரிடம் அத்துமீறலா?

    காஞ்சிபுர கோயில் அதிகாரி பெண் ஊழியரிடம் அத்துமீறலா?

    காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் கோயில் செயல் அலுவலர் அங்குள்ள பெண் ஊழியயரிடம் தவறாக நடந்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    உலக புகழ்பெற்ற பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கி வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ஆகும். இக்கோயிலில் செயல் அலுவலராக வேதமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கண்காணிப்பு கேமராவில்  பதிவான காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்தச் சம்பவம் குறித்து எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், உண்மை தன்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், புண்ணிய தலமாக விளங்கும் கோயிலில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்தனர். 

    இந்தச் சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் கோயில் செயல் அலுவலர், பெண் ஊழியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் இவர்கள் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பிறகு கோயில் செயல் அலுவலர் மற்றும் பெண் ஊழியரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 

    இந்த விசாரணை முடிவுகள் வந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தெரிவித்தார். 

    ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நான் தான் அப்படத்தில் நடிக்க வேண்டியது – ‘துணிவு’ நாயகி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....