Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நான் தான் அப்படத்தில் நடிக்க வேண்டியது - 'துணிவு' நாயகி பேச்சு!

    ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நான் தான் அப்படத்தில் நடிக்க வேண்டியது – ‘துணிவு’ நாயகி பேச்சு!

    ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நான் நடிக்க வேண்டியது என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். 

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம், அசுரன். இத்திரைப்படத்தில் மலையாள நாயகி மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருந்தார். அசுரனின் வெற்றிக்குப் பிறகு மஞ்சு வாரியருக்கு பெரிய அளவில் தமிழகத்தில் வரவேற்பு கிடைத்தது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருடன் மஞ்சுவாரியர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படமும் மஞ்சுவாரியருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது. 

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஆயிஷா எனும் மலையாளத் திரைப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் முக்கியமான தகவல் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். 

    அதன்படி, அசுரன் திரைப்படத்திற்கு முன்பாகவே அவருக்கு தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததாகவும், அப்போது அவர் மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் தமிழில் நடிக்க தேதியை ஒதுக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

    மேலும், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’படத்தில் நான் நடிக்க வேண்டியது. இயக்குநர் ராஜீவ் மேனன் முதலில் என்னிடம் கேட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கவில்லை. அந்த வேடத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நடித்தார் என்றும் மஞ்சு வாரியர் தெரிவித்திருந்தார். 

    இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு நடித்த படம்தான், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

    இலவசமாக ஆடைகளை வழங்கும் மால்; நெகிழ்ச்சியில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....