Tuesday, April 30, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இணையத்தை கலக்கி வரும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' நியூ போஸ்டர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

    இணையத்தை கலக்கி வரும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ நியூ போஸ்டர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

    இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனின் புதிய தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

    உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

    இதைத் தொடர்ந்து, சுமார்  24 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

    அதைத்தொடர்ந்து, கடந்த  2019 ஆம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன்-2’ படபிடிப்பு கமலுடன் ஆரம்பித்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

    அதன் பிறகு, மீண்டும் இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

    இந்நிலையில், நேற்று உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘இந்தியன் 2’ படக்குழு அவருக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை பிறந்த நாள் வாழ்த்துக்கள் உடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    இதில் கமல்ஹாசன் மாறுபட்ட தோற்றத்தில் மிகவும் வித்யாசமாக காட்சியளிக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் உலாவிக் கொண்டு வருகிறது 

    இதையும் படிங்க: விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்..! தைரியத்துடன் புரோமஷனில் களமிறங்கும் சமந்தா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....