Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்பு - சக நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் வாழ்த்து

    பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்பு – சக நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் வாழ்த்து

    சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி என்பவர் இன்று பொறுப்பெற்றுக் கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .

    முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, பின்னர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார் .

    இந்நிலையில் திரு முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்கள் செப்டம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியானதை அடுத்து ,அவரது பொறுப்பிற்கு எம் .துரைசாமி என்பவரை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரையை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து நேற்றுடன் திரு முனீஸ்வா்நாத் பண்டாரி அவர்களுக்கு 62 வயது முடிவடைந்ததை அடுத்து அவர் மாலையுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டு ,மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைக்கப்பட்டார் .இந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

    முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்கள், ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிவர் என்பதால், அவரது இந்த ஓய்விற்குப் பிறகு அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று காலை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவிபேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற்றது. இதன் பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு, சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் ஏற்கனவே நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தெலுங்கானா தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி – பிரதமர் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....