Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற ஜானி டெப்.. திரையுலகிற்கு திரும்புவாரா??

    பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற ஜானி டெப்.. திரையுலகிற்கு திரும்புவாரா??

    கடந்த சில மாதங்களாக இந்த நாடு, அந்த நாடு என்றில்லாமல் உலகிலுள்ள ஒட்டுமொத்த நாடுகளின் சமூக வலைத்தளங்களிலும், மீம்களாகவும், செய்திகளாகவும், பதிவுகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் ‘ஜானி டெப்.’ 

    திரையுலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவராக இருக்கும் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் உள்ள கதாப்பாத்திரமான கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்ற ஒரு நடிகராக வலம் வந்தவர்.

    சில வருடங்களுக்கு முன்னர் வரை பல திரைப்பட வாய்ப்புகளை தன் வசம் வைத்திருந்த ஜானி டெப் சமீப காலமாக ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருக்கவில்லை.

    அவர் கைவசம் இருந்த அனைத்து திரைப்படங்களும் பறி போயின. தனக்கு மிகப்பிடித்த கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாப்பாத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

    பிரபல பத்திரிகை நிறுவனங்களும் ஜானி டெப்பினை ஒரு குற்றவாளியாகவே பார்த்தன, உருவகப்படுத்தின. தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுடன் நடந்த விவாகரத்தால் உருவான பிரச்சனைகளே ஜானி டெப்பின் வாழ்க்கையில் இந்த அளவு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    ஜானி டெப்-ஆம்பர் ஹெர்ட்..

    2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெப்-ஹெர்ட் திருமணம் செய்துகொண்டனர். ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் மே மாதம் 2016ம் ஆண்டு தங்களது விவகாரத்துக்கான விண்ணப்பத்தினை அளித்திருந்தனர்.

    ஜானி டெப், தனது குடிப்பழக்கத்துக்கு அடிமையானது மட்டுமல்லாமல் தன்னையும் துன்புறுத்தியதாக ஹெர்ட் புகாரளித்திருந்தார். ஜனவரி 2017ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்பட்டது.

    ஆம்பர் ஹெர்டிற்கு நஷ்ட ஈடாக ஏழு மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டது. அந்த தொகை முழுவதினையும் ஏசிஎல்யு மற்றும் சிஹெச்எல்ஏ என்கிற இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்போவதாக ஆம்பர் ஹெர்ட் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், 2018ம் ஆண்டு தி சன் என்கிற பத்திரிக்கையானது ஜானி டெப்பினை ‘மனைவியினைத் தாக்குபவர்’ என்கிற பெயருடன் கட்டுரை ஒன்றினை வெளியிட்டது. இந்த கட்டுரையினை எதிர்த்து அந்த பத்திரிக்கையின் மேல் வழக்கு ஒன்றினை டெப் பதிவு செய்தார்.

    இந்த வழக்கிற்காக டெப் மற்றும் ஹெர்ட் இருவரும் சில நாட்களுக்கு விசாரிக்கப்பட்டனர்.

    பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இந்த வழக்கில் 2020ம் ஆண்டு ஜானி டெப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது மட்டுமல்லாது, ஹெர்ட் கூறியது அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டது.

    டெப் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் நிராகரித்த நீதிமன்றம், ஹெர்டின் வாழ்க்கையினை டெப் சிதைத்து விட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தது.

    இந்த தீர்ப்பிற்குப் பிறகு டெப் நடித்துக்கொண்டிருந்த திரைப்படமான ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பெயரில் அப்படத்தில் இருந்து இவர் விலகிக்கொண்டார்.

    மீண்டும் வழக்கு பதிவு செய்த ஜானி டெப்..

    2018ம் ஆண்டு தி வாஷிங்டன் போஸ்ட் எனப்படும் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதியிருந்த கட்டுரையிணை எதிர்த்து அவதூறு வழக்கு ஒன்றினை பதிவு செய்தார். டெப் தரப்பில் இந்த அவதூறு வழக்கு மூன்று விடயங்களுக்காக போடப்பட்டது.

    முதலாவதாக அந்த கட்டுரையில் ஆம்பர் ஹெர்ட் தன்னை பாலின வன்முறைகளுக்கு எதிரானவராக முன்னிறுத்துவதாக கூறியிருந்தார்.

    இரண்டாவது இம்மாதிரியான வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் நமது சமூகத்தினால் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பதனை தான் அனுபவித்துள்ளதாக கூறியிருந்தார்.

    மூன்றாவது வன்முறைகளுக்கு காரணமான ஆண்களை இந்த சமூகம் எப்படி பாதுகாக்கிறது என்பதனை தாம் கண்கூடாகப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மூண்டு விடயங்களுக்காக வழக்கு பதிவு செய்த டெப், ஆம்பர் ஹெர்டினால் அதிக வன்முறைக்கு உள்ளானது தாம்தான் எனவும், ஹெர்ட் தரப்பு கருத்துக்கள் தமக்கு எதிராக திரும்பியதாகவும், இதனால் டிஸ்னி நிறுவனமானது தம்மை நிராகரித்ததாகவும் கூறியிருந்தார்.

    50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு இந்த வழக்கினை பதிவு செய்த டெப்பினை எதிர்த்து அம்பர் ஹெர்டும் தாம் கூறிய கருத்துக்கள் உண்மை தான் எனக்கூறி 100 மில்லியன் டாலர் மான நஷ்டஈடு வழக்கு தொடுத்திருந்தார்.

    தீர்ப்பு வந்தது..

    இவர்கள் இருவரது வழக்குகளும் ஏப்ரல் 11ம் தேதி 2022ம் வருடம் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் பொறுமையாகக் கேட்கப்பட்டது.

    இருவருக்குள்ளும் நடந்த விவாதங்கள், சண்டையின் போது எடுத்த காணொளிகள், இருவருக்கும் தெரிந்த மனிதர்களின் சாட்சிகள் என அனைத்து தரவுகளையும் தெளிவாகக் கேட்டறிந்து நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.

    ஆம்பர் ஹெர்ட் தான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜானி டெப்பிற்கு நஷ்ட ஈடாக 15 மில்லியன் டாலர் தொகையினை கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

    மேலும், ஜானி டெப்பும், ஹெர்டுக்கு தொல்லைகள் கொடுத்துள்ளதாகக் கூறிய நீதிமன்றம் இரண்டு மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

    இந்த தீர்ப்பினை வரவேற்று ஜானி டெப்பின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து வருகின்றனர். 

    ‘உண்மை எப்போதும் தோற்பதில்லை; ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது.’ என்று தனது கருத்தினை பகிர்ந்துள்ள ஜானி டெப், உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

    இக்கட்டான தருணங்களிலும் தன்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் ‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ’ ஜானி டெப். 

    இந்த வழக்கு முடிவினை தொடர்ந்து பல்வேறு விதமான ஹாஷ்டேகுகளும் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக ஹாஷ்டேக் மென் (டூ  men too) அதிகமாக பிரபலமாகி வருகிறது. வழக்கில் வெற்றி கிடைத்த நிலையில் இனி மீண்டும் ஜானி டெப்பினை திரையில் ரசிக்கும் காலம் வருமா என்று காத்திருக்கின்றனர்.

    உலகின் மிக நீளமான தாவரம் கண்டுபிடிப்பு! ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....