Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்! அதிமுக கோரிக்கை

    ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்! அதிமுக கோரிக்கை

    புதுச்சேரியில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் கூட்டணியில் உள்ள முதலமைச்சர் செய்யாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமை கழகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரைச்சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், மறைந்த அதிமுக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதாகவும், மறைவிற்கு பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் திருவருவ சிலை வைக்க பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் காழ்புணர்ச்சி காரணமாக கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு சிலை வைக்க முன்வரவில்லை என்றும், தற்போதைய அதிமுக அங்கம் வகிக்கும் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள முதலமைச்சர் ரங்கசாமி புரட்சி தலைவி அம்மாவின் முழு திருவுருவ வெண்கல சிலை அரசு சார்பில் வைத்திடவும், மேலும் அம்மாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தினோம். சிலை வைக்கப்படும் என எங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தாலும் அவற்றை செயல்படுத்ததற்கான எந்த ஆக்கபூர்வ பணிகளையும் அரசு செய்யவில்லை.

    கடந்த ஆட்சி காலத்தில் அம்மாவுக்கு சிலையும் வைக்கவில்லை அரசு விழாவும் கொண்டாடவில்லை இதே நிலை தற்போதைய எங்களது கூட்டணி அரசும் நினைத்திருக்குமோ என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. எனவே வரும் அம்மாவின் பிறந்தநாளான பிப்பரவரி 24-ம் தேதியை அரசு விழாவாக அறிவித்து கொண்டாட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு, கழக தொண்டர்கள் உறுதுணையாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    தமிழகத்தில் 28,000 சத்துணவு மையங்களை மூட திட்டமா? மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....