Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஜான்வி கபூர் தமிழ் படங்களில் ஒப்பந்தமாகவில்லை' - போனி கபூர் ட்விட்!

    ‘ஜான்வி கபூர் தமிழ் படங்களில் ஒப்பந்தமாகவில்லை’ – போனி கபூர் ட்விட்!

    பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று பரவிய செய்திகளுக்கு, அவரது தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் மறைந்த நட்சத்திரமான ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் 2 மகள்களில் மூத்தவர் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் வரவேற்பையும் பெற்று வருகிறது. 

    இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள ‘பையா 2’ படத்தில் ஆர்யாவுக்கு  ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தத் தகவலானது இணையத்தில் வைரலானது. 

    இதைத்தொடர்ந்து, ஜான்வி கபூரின் தந்தை போனிகபூர் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிமிடம் வரை ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் ஒப்பந்தமாகவில்லை. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மதம், கடவுளுக்கு எதிரான கருத்துகளை நீக்கவில்லை; விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....