Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டின் 14-வது துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு

    நாட்டின் 14-வது துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு

    நாட்டின் 14-வது துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக் கொண்டார். 

    கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய ஜெகதீப் தங்கர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார். 

    புதிய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தங்கருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, வெங்கையா நாயுடுவின் துணை குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் (ஆகஸ்ட் 10) முடிவடைந்தது.

    இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) நாட்டின் 14-வது துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக் கொண்டார். ஜெகதீப் தங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    தகவல் அறியும் உரிமை சட்டம்; கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 பேர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....