Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு50 ஓவருக்கு 506 ரன்கள் எடுத்த தமிழக அணி; இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...

    50 ஓவருக்கு 506 ரன்கள் எடுத்த தமிழக அணி; இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

    விஜய் ஹசாரே கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் 50 ஓவருக்கு 506 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது. 

    இந்தியாவில் 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அருணாச்சல பிரதேசத்திற்கும், தமிழக அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தமிழக அணி சார்பில் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவருமே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெகதீசன் இரட்டைச் சதமடித்து இந்த ஆட்டத்தில் அசத்தினார். ஏற்கனவே, விஜய் ஹசாரே கோப்பையில், தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5- வது சதத்தை எடுத்து சாதனை படைத்தார். முதல் 100 ரன்களை 76 ரன்களில் எடுத்த ஜெகதீசன், அடுத்த 100 ரன்களை 38 பந்துகளில் எடுத்து அசத்தினார். 

    மேலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் சதமடித்தார். இத்தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இவர்களின் இந்த சதத்தால் இன்று பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையை ஜெகதீசன் படைத்துள்ளார். மேலும், விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

    இதோடுமட்டுமல்லாமல்,  லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய உலக சாதனையையும் ஜெகதீசன் படைத்துள்ளார். ஜெகதீசனும் சாய் சுதர்சனும் 38.3 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்தார்கள். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதற்கு முன்னால் எந்தவொரு ஜோடியும் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை.

    அடுத்ததாக, இன்றைய ஆட்டத்தில் தமிழ அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு  506 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. 

    மேலும், ஜெகதீசன் 277 ரன்கள் எடுத்த நிலையிலும், சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்த நிலையிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் 28 ஓவர்களிலேயே இழந்தது மாபெரும் தோல்வியைத் தழுவியது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....