Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபரவும் புது வைரஸ்; மக்களுக்கு ஆபத்தா? - மருத்துவ மையம் தந்த தகவல்..

    பரவும் புது வைரஸ்; மக்களுக்கு ஆபத்தா? – மருத்துவ மையம் தந்த தகவல்..

    புதிதாக பரவி வரும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    நாடு முழுவதும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, தொண்டை வலி, உடல் வலி மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே, தமிழ்நாட்டில் சளி மற்றும் இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது பரவி வரும் இந்தக் காய்ச்சல் எச்.3என்-2 என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மேலும் இந்தக் காய்ச்சல் வந்தால், தொடர் இருமலும் தொண்டை வலியும் உடல் வலியும் இருக்கும் என்றும், இது உயிருக்கு ஆபத்தானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதோடு, சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது எனவும், அதிக தண்ணீர் குடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக இதை தடுக்க முடியும் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    பாமக மகளிர் நிர்வாகி கொலை; தகாத உறவு காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....