Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் பறிபோனதா கருத்துச் சுதந்திரம்?- எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

    இந்தியாவில் பறிபோனதா கருத்துச் சுதந்திரம்?- எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

    உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது என்று ஆராய்ந்து, ஆர்எஸ்எஃப் எனப்படும் எல்லையில்லா பத்திரிகையாளர்கள் (Reporters without borders) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை சில மாதங்களுக்கு முன்னர் ஆர்எஸ்எஃப் வெளியிட்டிருந்தது. பத்திரிகை சுதந்திரத்துக்கு அதிக மதிப்பளிக்கும் நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டது. டென்மார்க், ஸ்வீடென், எஸ்டோனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்தன.

    180 நாடுகள் இடம்பெற்ற இந்த பட்டியலில் கடைசி நாடாக வடகொரியா இடம் பிடித்திருந்தது. உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யா, சென்ற ஆண்டை விட ஐந்து இடங்கள் பின்னுக்குச் சென்று 155வது இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றன. பாகிஸ்தான் 157வது இடத்தையும், இலங்கை 146வது இடத்தையும், வங்கதேசம் 162வது இடத்தையும், மியான்மர் 176வது இடத்தையும் பிடித்துள்ளன. நேபாளம் மட்டுமே 30 இடங்கள் முன்னேறி 76வது இடத்தைப் பிடித்துள்ளது.

    சென்ற ஆண்டு 142வது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 150வது இடத்தைப் பிடித்துள்ளது. 

    இந்த பட்டியலில் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள், தனி நபர் ஒருவரின் கீழ் உள்ள சவூதி அரேபியா, வடகொரியா, மியான்மர் போன்ற நாடுகள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

    பத்திரிகை சுதந்திரத்துக்கான பட்டியலை முதன் முதலாக ஆர்எஸ்எஃப், 2002ம் ஆண்டு வெளியிட்டது. அந்த ஆண்டில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டிலிருந்து இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து சரிந்து வருகிறது.

    பத்திரிகை சுதந்திரம் சரிந்து வருவதற்கு இந்தியாவின் அரசியல் பாகுபாடுள்ள ஊடகம் தான் கரணம் என ஆர்எஸ்எஃப்  அமைப்பு கூறியுள்ளது.  இந்தியாவை, பத்திரிகையாளர்கள் வசிப்பதற்கு ஆபத்தான நாடு என பல்வேறு நாடுகள் குறிப்பிடுகின்றன.

    கடந்த 2021ம் ஆண்டு ஆர்எஸ்எஃப் அமைப்பு கொடுத்த அறிக்கையின்படி, பத்திரிகையாளர்கள் வசிப்பதற்கு ஆபத்தான நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றது.

    இதுபோல, குளோபல் இம்ப்யூனிட்டி இன்டெக்ஸ் எனப்படும் அமைப்பு உருவாக்கிய தரவரிசை பட்டியலில் ஆபத்தான நாடுகள் வரிசையில் இந்தியா 12வது இடம் பெற்றுள்ளது. கொரோனா காலத்தின் போது பத்திரிகையாளருக்கு எதிராக அதிக வழக்குகள் பதிந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்தது.

    ஃப்ரீ ஸ்பீச் கலெக்ட்டிவ் எனப்படும் இணையதளம், 2020ம் ஆண்டு இந்தியாவில் 67 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் சிறிய நகரங்களிலும், சிறிய அளவு பத்திரிகை நிறுவனங்களிலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆர்எஸ்எஃப் அமைப்பானது , கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் அதிகம் கொல்லப்பட்ட முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளதாக கூறியுள்ளது. 2010-20க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 45 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளதாக யுநெஸ்கோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....