Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் ஏலம் போன வீரர்கள்! கெத்து காட்டிய இஷான் கிஷன், ஸ்ரேயாஸ்!

    ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் ஏலம் போன வீரர்கள்! கெத்து காட்டிய இஷான் கிஷன், ஸ்ரேயாஸ்!

    இந்த வருடம் பதினைந்தாவது ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்றும், நாளையும் பெங்ளூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி , இன்று பெங்ளூரில் ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 10 அணிகளும், 600 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

    தற்போது வரை, ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பார்ப்போம்:

    • இந்திய வீரர் ஷிகர் தவானை 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.
    • இந்திய வீரர் அஸ்வினை 5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    • ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ₹7.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
    • தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
    • நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
    • இந்திய வீரர் ஸ்ரேயாஸ், 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
    • இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
    • தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், ₹6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
    • ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் மணீஷ் பாண்டே ரூ4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!
    • இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!
    • இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், ₹7.75 கோடிக்கு  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிஜே பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ 4.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 8 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 8.75 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் ஹர்ஷல் படேல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார்!
    • இந்திய வீரர் தீபக் ஹூடா, ₹5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்!
    • இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ரூ. 10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்
    • இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்!
    • இந்திய வீரர் க்ருனால் பாண்டியா ரூ. 8.25 கோடிக்கு ஏலம் போனார் அவரை லக்னோ அணி வாங்கியுள்ளது.
    • ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ரூ. 6.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் இஷான் கிஷன், ரூ 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
    • இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, ₹6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
    • இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
    • இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ.5.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
    • தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    • இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 10 கோடிக்கு வாங்கப்பட்டார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....