Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் ஆயிரம் இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்

    தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்

    தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறுகின்றன. 

    நாடு முழுவதும் இன்ஃப்ளுயன்சா தொற்று வகை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளுயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

    காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறுகின்றன.  இந்த பணிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடைபெறுகின்றன. 

    முன்னதாக, இதுதொடர்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சில முக்கியமான அறிவுறுத்தல்களை கூறியிருந்தார். மேலும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியீடு?- அண்ணாமலை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....