Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'லக்கேஜ் எங்கப்பா?' - பயணிகளின் உடைமைகளை மறந்து பறந்த விமானம்!

    ‘லக்கேஜ் எங்கப்பா?’ – பயணிகளின் உடைமைகளை மறந்து பறந்த விமானம்!

    இண்டிகோ விமானம் 37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பறந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.

    விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சமீப காலமாகவே விமானத்தில் பயணிக்கும்போது சில இடையூறுகள் ஏற்படுவது குறித்த காணொளிகள் வெளியாகி வருகின்றன.  

    அந்த வகையில், ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம், பயணிகளின் 37 பைகளை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாக நேற்று தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6e 409 விமானத்தில் பயணிகளின் 37 பைகள் கவனக்குறைவாக விட்டுச் சென்றதாகவும், விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இண்டிகோ விமான நிறுவனத்தின் இந்தக் கவனக்குறைவான செயல் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜன்னல் இருக்கைக்கு முன்பதிவு செய்திருந்த பயணிக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதற்காக அந்தப் பயணி விளக்கம் கேட்ட ட்விட்டர் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது. 

    நிலநடுக்கத்தால் உடைந்த அணை; சிரியாவில் மக்கள் அவதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....