Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு- பிரதமர் கருத்து

    போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு- பிரதமர் கருத்து

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினும் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடினர்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் உலகளவில் பொருளாதார பாதிப்பு எழுந்துள்ள நிலையில், இந்த உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, விவாதிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களும், விவசாயம்,  மருத்துவ உபகரணங்கள் தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதோடு உலக நிலவரங்கள் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

    பேச்சுவாரத்தையின் மூலம் உக்ரைனில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது, இந்தியா அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

    மீண்டும் தலைதூக்கும் கொரோனா- இனி முகக்கவசம் கட்டாயம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....