Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆண்கள் அணி அபாரம், அதிர்ச்சியில் சாய்னா : சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் முடிவுகள்

    ஆண்கள் அணி அபாரம், அதிர்ச்சியில் சாய்னா : சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் முடிவுகள்

    2022ஆம் ஆண்டுக்கான சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பசேல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றுகள் முடிவடைந்து அதில் வெற்றி பெற்றவர்கள் நேற்று இரண்டாம் சுற்றில் பங்கேற்றனர்.

    இந்தியாவைப் பொறுத்தவரை கலப்பு இரட்டையர் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 

    நேற்று நடந்த ஆட்டத்தில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான விக்டர் ஆக்செல்சன் கடைசி நிமிடங்களில் ஆட்டத்தை விட்டு விலகியதால் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் எளிதாக காலிறுதிக்கு முன்னேறினார். 

    மற்றொரு ஆட்டத்தில் ஆடிய, இந்தியாவின் 26ஆம் நிலை வீரரான ப்ரனாய் ஹெச்.எஸ், 62ஆம் நிலை வீரரான பின்லாந்தைச் சேர்ந்த கல்லி கோல்ஜொனேனிடம் முதல் செட்டை 19-21  என இழந்தார்.

    ஆனாலும், மீண்டு எழுந்த அவர் 21-13 மற்றும் 21-9 என அடுத்த இரு செட்களை கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். 

    2வது சுற்றில் ஆடிய மற்றொரு வீரரான இந்தியாவின் சமீர் வெர்மா, தன்னை எதிர்த்து ஆடிய அஜர்பைஜானின் அடி ரெஸ்கி டிவிச்சாயோவை 23-21, 21-7 என எளிதிதாகத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். 

    மற்றொரு முக்கிய வீரரான உலகின் 12ஆம் நிலை இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸின் 60ஆம் நிலை வீரர் கிறிஸ்டோ போபோவ்விடம் 13-21 என முதல் செட்டை இழந்து அடுத்த இரு செட்களில் 25-23, 21-11 என தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அனைத்து வீரர்களும் 2வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 19ஆம் நிலை ஸ்காட்லான்ட் வீராங்கனை கிர்ஸ்டி கில்மோரிடம், இந்தியாவின் 62ஆம் நிலை வீராங்கனை அஷ்மிதா சலிஹா 21-18, 22-20 என தோற்று வெளியேறினார். 

    இந்தியாவின் முன்னணி வீராங்கனையான லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும் உலகின் 23 ஆம் நிலையில் இருப்பவருமான சாய்னா நேவால், மலேசியாவின் 64ஆம் நிலை வீராங்கனை கிசோனா செல்வதுரையுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 17-21 என சாய்னா கைப்பற்ற, அடுத்த இரு செட்களை கிசோனா 21-13, 21-13 என கைப்பற்றி சாய்னாவைத் தோற்கடித்தார். இந்த 23 வயது இளம் வீராங்கனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியாவில் வசிக்கும் தமிழகப் பெண் ஆவார். 

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, துருக்கியின் நெஸ்லிகன் இஜிட்டை 21-19, 21-14 என நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். 

    ஆண்கள் இரட்டையரைப் பொறுத்த வரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணை, இத்தோனேசியாவின் ப்ரமுத்யா குசுமவர்தனா மற்றும் எரேமியா எரிக் யோச்சே யாகோப் ரம்பிட்டான் இணையிடம் 21-19, 22-20 என தோற்று வெளியேறியது. 

    மற்றொரு இணையான இஷான் பட்நாகர் மற்றும் சாய் பிரதீக்.கே இணை, இத்தோனேசியாவின் முகம்மது ரியான் அர்டியாண்டோ மற்றும் பஜர் அல்பியான் இணையிடம் 21-15, 21-12 என எளிதாகத் தோற்று வெளியேறியது அதே நேரத்தில் பொக்கா ரெட்டி மற்றும் ரெட்டி பி.சுமித் இணையும் தோற்று வெளியேறியது. 

    பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் ரெட்டி என்.சிக்கி இணை, யுவோன் லி மற்றும் ஐரிஸ் வாங் இணையை 21-11, 21-18 என எளிதாகத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெற இருக்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....