Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால்: போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு

    ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால்: போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு

    போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற் சங்கங்கள் வருகின்ற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. 

    கொரோனா காலங்களில் வேலையின்றியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை ஈடு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நியாமான கோரிக்கைகளாக இருந்தால் அரசு அதனை ஏற்கும் எனவும் பேசப்படுகிறது. 

    தேவையற்று இந்த போராட்டங்களில் இந்தச் தொழிற் சங்கங்கள் ஈடுபடுமானால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படும் என்பதால் போக்குவரத்து கழகம் முன்கூட்டியே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    மேலும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் எந்தவித விடுப்பும் எடுக்க கூடாது எனவும் ஏற்கனவே விடுப்பு அளிக்கப்பட்டு இருந்தவர்களுக்கும் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்களின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    தமிழ்நாடு போக்குவரத்து துறையின் இந்த எச்சரிக்கை போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 28 மற்றும் 29 அதே தேதிகளில் போராட்டங்களும் முழக்கங்களும் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

    சில தொழிற்சங்கங்களின் இந்த முடிவால் மற்ற போக்குவரத்து ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பு ஏற்கனவே அந்தப் போராட்டங்கள் நடைபெறும் நாட்களில் முன்பே விடுப்பு எடுக்க இருந்த பலரையும் பாதித்துள்ளது. 

    போராட்டம் அறிவித்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நமக்கு தான் நாட்டம் என உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்த அறிவிப்பினை மீண்டும் திரும்பப் பெறுமா என்று கேள்வி எழுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....